இடம் பொருள் காதல் (4)

வள் அழுத்திய காலிங் பெல்லின் பலனாக கதவை திறந்தது நவிரா..

“ஹை….அஞ்சுக்கா வந்தாச்சு….நீங்க ரொம்ப பிஸி….கொஞ்ச நாள் கழிச்சு கூட்டிட்டு போறேன்னு அம்மா சொன்னாங்கக்கா….ஆனா நீங்க வந்துடீங்க…”என்றபடி குதித்த நவிராவைப் பார்க்க கண்ணில் நீர் கட்டியது என்றால் சத்தம் கேட்டு அடுப்படியில் இருந்து வெளியில் வந்த சித்தியை பார்த்ததும் கட்டி கொண்டு அழுதாள் அஞ்சனி.

“சாரி சித்தி…வெரி சாரி…” என்றபடி.

“என்னடி…என்ன ஆச்சு….” என்ற சித்தியின் குரலில் அம்மாவின் சத்தம்.

தன் மன நினைவுகளை அதன் திருந்தல்களை கொட்டி தீர்த்தாள் அஞ்சனி. ஆனால் இப்படி திருந்திய நினைவுகளுக்கு காரணமான நிவந்தின் செயல்களை சொல்ல மனம் வரவில்லை.

கேட்டிருந்த சித்தியோ…”சரியான லூசு….இத சொல்ல கிளம்பி வந்தியாக்கும்…இப்படி ஒரு அழுகை வேற, நான் கூட மாப்ளைக்கும் உனக்கும் என்னமோன்னு பயந்தே போய்ட்டேன்….கல்யாணம் ஆகி புகுந்த வீடு போனதும் எல்லாருக்கும் பிறந்த வீட்டை பத்தி இப்படி எமோஷனலா தோணும்….அப்றம் கொஞ்ச நாள்ல சரியாகிடும்…போ முகத்தை கழுவு… .மாப்ள வர்றதுக்குள்ள நைட் டிஃபன் செய்யனும்…இத்தனை மணிக்கு வந்துருக்க… சாப்பிட்டுட்டே போங்க” என்றபடி சாதாரணமாக எழுந்து போனார்.

“சித்தி நிவந்த் அப்பாட்ட எதுக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னீங்க…”

திரும்பி பார்த்தார் சித்தி.” சின்ட்ரெல்லா ஸ்டோரீஸ் படிக்க நல்லா இருக்கும் அஞ்சு…ஆனா நிஜத்தில் ரொம்ப கஷ்டம்…அவங்க பழக்க வழக்கம் உனக்கும், உன்னோடது அவங்களுக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் உதைக்கும்…அதோட…நிவந்த் மட்டும் உன்னை விரும்பி, அவங்க வீட்ல இந்த கல்யாணதுக்கு எதிர்ப்பு இருந்தா, இப்படி பழக்க வழக்க முரண்ல வாற ப்ரச்சனையும் சொந்த பேரண்ட்ஸின் வெறுப்பும் சேர்ந்து எந்த ஆணையும் மனதளவிலாவது விவாகரத்தை நோக்கி தள்ளும்…அதான்…நிவந்த் வந்து பெண்கேட்டதும்….அவங்க அப்பாவை பார்த்து இதை தடுத்து நிறுத்த சொல்லி கேட்டுட்டு வந்தேன்……அதையும் தாண்டி அவங்க சம்மதிச்சாங்கன்னா நாம பணத்துக்காக பையனை வளச்சு போட்டுடோம்னு அவங்களுக்கும் உறுத்தல் இல்லாம இருக்குமே…உன்னை நல்ல படியா நடத்துவாங்கல்ல…. நிவந்த் அப்பா பேச்சை கேட்டு உன்னை கல்யாணம் செய்யாம போறத கூட தாங்கிடலாம்…ஆனா கல்யாணம் செய்துட்டு பின்னால அவங்க வீட்டாளுங்க காரணமா உன்னை பிரிஞ்சா தங்க முடியாதே…அதான்….

சரி இப்ப எதுக்கு அந்த பேச்சு அதான் நிவந்த் அப்பாவே  விரும்பி வந்து பொண்ணு  கேட்டு, அனித்ராவும் நிவந்தும் ஆளாளுக்கு அஞ்சனிக்கு நான் கேரண்டின்னு ஆயிரம் உறுதி மொழி கொடுத்து கல்யாணமும் ஆயிட்டே….”

சித்தி அடுப்படிக்குள் செல்ல அதிர்ந்து போய் நின்றாள் அஞ்சனி. நிவந்த்  சித்தியிடம் வந்து பெண்கேட்டாராமா? சித்தி சரி என்று சொன்ன பின்பு நடந்த திருமணமா இது. அனித்ரா….? இந்த கதை எதுவும் இவளுக்கு தெரியாது.

இவளிடம் நிவந்த் மணக்க கேட்டான், இவள் சம்ம்மதித்தாள், இவள் சித்தியிடம் சொன்னாள், நிச்சய தார்த்தம், திருமணம் இப்படித்தன் இவள் இதுவரை நினைத்துக்கொண்டிருக்கிறாள். நிவந்த் எப்போது சித்தப்பாவிடம் வந்து பெண்கேட்டான்?

நிச்சயத்திற்கு பின் ஒருநாள் நிவந்துடன் அலைபேசியில் அரட்டை அடித்துக்கொண்டிருந்த காலத்தில் “உங்க சித்தியே எங்க வீட்டு படியேறி வந்து   இந்த பொண்ணுட்ட இருந்து உங்க பையனை காப்பாத்துங்கன்னு  சொன்ன பொண்ண கல்யாணம் செய்ய போறேன்…உன்ட்ட மாட்டிகிட்டு நான் என்ன ஆகபோறனோ” ன்னு கிண்டலடித்தபோதுதான் இவளுக்கு சித்தி இப்படி ஒரு வேலை செய்திருப்பது தெரிந்தது. சித்தியின் சதி என்று அப்பொழுது நினைத்தவள் அதை நிவந்திடம் கூட பேச விரும்பவில்லை. தன் வீட்டை பற்றி தானே அவனிடம் குறை பட வேண்டுமா என்ற எண்ணம். அதோடு தான் பெருந்தன்மையாக நடந்து கொள்வதாக வேறு ஒரு நினைப்பு இவளுக்கு.

ஆக நிவந்தின் இன்றைய கோபத்திற்கு காரணம் இந்த சித்தி விஷயம் தானோ…பழசை மறந்து விட்டாயா என்று அண்ணனும் தங்கையும் மாறி மாறி சொன்னார்களே… அவனுக்கு சித்தி மீது நல்லெண்ணமோ…?

சித்தியின் மொபைலில் இருந்து அழைத்தாள் அவனது எண்ணை.

இணைப்பை ஏற்றான் நிவந்த். “சொல்லுங்க அத்தை….எப்டி இருக்கீங்க…?”

“இது அத்தை இல்ல, அத்தை பொண்ணு பேசுறேன்….நைட் நீங்க இங்க சாப்ட வருவீங்க அப்டியே தன் மகளை கூட்டிட்டு போவீங்கன்னு உங்க அத்தை நம்பிட்டு சந்தோஷமா சமையல் செய்துட்டு இருக்காங்க… சமையல் செய்றது அவங்கதான் நீங்க நம்பி சாப்டலாம்….”

“சரி வரேன்…..” என்றவன் சிறு இடைவெளிவிட்டு “நீ சாப்டியா?” என்றான். அவ்வளவுதான் அழுகை பொத்துகொண்டு வந்தது அஞ்சனிக்கு.

“சாரி…நிவந்த்…ஐ மிஸ்ட் யூ வெரி பேட்லி…உங்க மேல எனக்கு பயங்கர கோபம்….உங்கள பார்க்காம இதுக்கு மேலயும் முடியாது….ப்ளீஸ் வந்துடுங்க….”

மனதில் வந்த அத்தனை நினைவுகளையும் சொன்னாள் மனைவி.

 

டுத்த அரைமணி நேரத்தில் சித்தி ஃப்ளாட்டின் காலிங் பெல் அழைக்க, ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் அஞ்சனி. அவன்தான்.

நினைத்து, புரிந்து, உணர்ந்தெல்லாம் செய்யவில்லை. அவனை இறுக்கி அணைத்திருந்தாள். அவனது அணைப்பும் இறுக்கமாய் இருந்தது. இவள் நெற்றியில் முதல் முத்தம் விதைத்தவன், அவளை தன்னோடு சேர்த்து தூக்கியபடி வீட்டிற்குள் இரண்டடி வைத்தான் மெல்ல முனுமுனுத்தபடி. “என் பொண்டாட்டியை ஊருக்கே ஓசி சினிமாவா காண்பிக்க நான் ரெடியா இல்ல…”

அவன் சொன்ன பின்புதான் சித்தி நவிரா எல்லோரும் ஞாபகம் வர சட்டென அவனிடமிருந்து விலக முயன்றாள்.

“ஹேய்…அதான் உள்ள வந்துட்டமே…” அவன் இவளை விடுவதாய் இல்லை.

“ஷ்….சித்தி சித்தப்பா எல்லோரும் இருக்காங்க….”

“அவங்கெல்லாம் உலகம் தெரிஞ்சவங்க ….வரமாட்டாங்க….” இவள் மென் திமிறல்கள் அவனிடம் தோற்றன.

“நவி குட்டி….?அவ பார்த்தா அசிங்கமா போய்டும்….விடுங்க…” சிணுங்கினாள்.

“வர்றதா இருந்தா அவ இதுக்குள்ள வந்திருக்க மாட்டாளா…?”

வழக்கமாக நவிரா வீட்டில் இருந்தால் ஓடி வந்து கதவு திறப்பது அவளாகத்தான் இருக்கும். இன்று என்னவாயிற்று?

“உங்க சித்தி பிடிச்சு வச்சிருப்பாங்க…” இவள் காதருகில் கலைந்திருந்த முடியை ஒற்றைவிரலால் ஒதுக்கிவிட்டான்.

“ஹை…அத்தானுக்கு நானே ஜூஸ் போட்டு கொண்டு வந்தேனே…” .என்றபடி நவிரா வரும்வரை தன்னவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள் அஞ்சனி.

இவளிடம் சொன்னேனே என்ற பொருளில் கண்சிமிட்டியவன்

“வாங்க வாங்க லிட்டில் ஏஞ்சல்….” என்றபடி ஜூசை எடுத்துக்கொண்டவன் “தேங்க்ஸ் அத்தை” என்றபடி சமயலறையை நோக்கி போனான்.

“வாங்க வாங்க மாப்ள சார்…எதோ எங்களாலான உதவி…” என்றபடி சித்தி சமையலறையிலிருந்து வெளிப்பட்டார்.

ஆக நிவந்தின் ஆட்களை எடைபோடும் திறன் முழுக்கவும் சரியே.

அதன்பின் மிக இயல்பாய் சித்தி சித்தப்பாவுடன் அரட்டை அடித்துக்கொண்டு, அவர்களிடம் இவளை கேலி செய்துகொண்டு, நவிராவுடன் போட்டி போட்டு சாப்பிட்டு அவளை சாப்பிட வைத்துகொண்டு, இவளறிந்த நிவந்தாய் அவன்.

விடைபெறும் போது நவிரா மட்டுமல்ல, இவளும் சித்தியும் கூட அழுதார்கள்.

 

சித்திவீடு கண்மறையவும் காரில் வைத்தே கேட்டாள் அஞ்சனி…

“சாரி….நிவந்த்…சித்தி விஷயத்துல நான் தப்பு செய்துருக்கேன்னு தெரிஞ்சிட்டு…ஆனா உங்களுக்கு இதெல்லாம் எப்படி…?

“முதன்முதல்ல  பார்க்கவுமே உன்னை எனக்கு பிடிச்சிருந்தாலும், பணத்துக்காக என்னை சுத்ற மின்மினிபூச்சிட்ட நான் மாட்டிகிட கூடாதுங்கிற எச்சரிக்கை உணர்வுல உன்னை ரொம்பவும் அப்சர்வ் செய்துட்டுதான் என் விருப்பத்தை என் அப்பாட்ட சொன்னேன்… அப்பாவுக்கும் எனக்கு ஆரம்பத்திலிருந்த அதே எச்சரிக்கை உணர்வு… உன்னை பத்தி விசாரிச்சு இருக்காங்க….அப்ப உங்க சித்தப்பா வீட்டைபத்தி ரொம்ப நல்ல படியா கேள்விபடவும்    கல்யாணத்துக்கு சரின்னு சம்மதிச்சாங்க….ஆனாலும் எங்க வீட்ல இருந்து பொண்ணு கேட்டா உங்க சித்தப்பா வீட்ல மறுக்கதான் செய்வாங்கன்னு எனக்கு ஒரு ஃபீல்… அதான் அப்பாவை கூப்பிடாம நான் மட்டும் வந்து உங்க வீட்ல பொண்ணு கேட்டேன்…நான் எதிர் பார்த்த மாதிரியே பொருளாதார பொருத்தம் இல்லைனு அவங்க மறுத்தாங்க…. கல்யாணத்துக்கு பிறகு எதாவது ப்ரச்சனைனா ஏன்னு கேட்க முடியாத உயரத்துல இருக்கிற வரன் வேண்டாமேன்னு தவிர்த்தாங்க…அதோட என் அப்பாவை தேடி வந்து என் மனசை மாத்த சொல்லி கேட்டுகிட்டாங்க.

அப்ப அவங்க அதுவும் குறிப்பா உங்க சித்தி பேசினதுல எங்கப்பா நம்ம வீட்டு மருமகள் இந்த இடத்துல இருந்துதான் வரனும்னு முடிவே செய்துடாங்களாம்….

அப்புறம்தான் நான் உன்ட்ட வந்து சந்தோஷமா ப்ரபோஸ் செய்தேன்…. ஆனா மேரேஜ் அன்னைக்கு நைட் ரிஷப்ஷன் மேடையில நீ உங்க சித்தப்பா சித்திட்ட ஏன் நவிராட்ட கூட நல்லா மூவ் பண்ணலை… அவங்க இனி உனக்கு தேவை இல்லங்கிறமாதி ஒரு பாடி லாங்குவேஜ்… நான் பயங்கரமா அப்செட் ஆகிட்டேன்….இத்தன வருஷம் எந்த சுயலாபமும் இல்லாம எந்த கட்டாயமும் இல்லாம உன்னை வளத்தவங்களையே உன்னால இவ்ளவு ஈசியா தூக்கி எறிய முடியுதுன்னா, உனக்கு நேரடியா எதுவும் செய்யாத என் அப்பா, தங்கைய நீ எப்படி நடத்துவ..? இப்ப உணர்ச்சி வேகத்துல என்ட்ட நல்லா இருந்தாலும்… இந்த உணர்ச்சிகள் வடிந்த காலத்தில் நானும் உனக்கு வேண்டாதவனா ஆகிடுவேனேன்னு ரொம்பவும் கஷ்டமாயிட்டு…

அதான் நேரே வீட்டுக்கு போகலாம்…பேசி சரியானபிறகு ஹனிமூன் போகலாம்னு வீட்டுக்கு போனேன்… ஆனா அன்னைக்கு நாம வீட்டுக்கு போறதுன்னு ப்ளான் இல்லைங்கிறதால உன் ரூம் அதாவது  உன் திங்ஸ் வைக்றதுக்கான ரூம் ரெடியாகம இருந்துது,  அதுல போய் கதவை பூட்டிகிட்டு நீ  தூங்கிட்ட….நம்ம ரூமுக்கு வரவே இல்லை….

அப்பதான் எனக்கு ஒருவிஷயம் புரிஞ்சிது….எத்தனைதான் உரிமை குடுத்தாலும்…உன்னை பொறுத்தவரை எல்லா இடமும் அடுத்த இடம்…வேர் எவர் யு ஆர்…யு ஆல்வேஸ் ஃபீல் அஸ் அன் அவுட்சைடர்…அப்ப அடுத்தவங்க உரிமையா பழகினா உனக்கு அது உன்னை இன்சல்ட் பண்ற மாதிரி தோணும்..

அப்பதான் மரணம் வரை நீயும் நானும் ஒன்னுன்னு சொல்லி கல்யாணம் செய்து கூட்டி வந்திருக்கேன்…நான் வான்னு கூப்பிடலைங்கிறதுக்காக நீ நம்ம ரூமுக்கே வரலை…இன்ஃபஅக்ட் அதை நம்ம ரூம்னு நீ யோசிக்க கூட இல்லை..அம் ஐ கரெக்ட்….?

“ம்…”.

உங்க சித்திவீட்ல உனக்கு எது ப்ரச்சனையாகி இருக்கும்னு புரிஞ்சிது….அதான்  என்னை பிடிச்சுகிட்டு அவங்களை உதறிட்டு வர்றவ, நான் உன்னை பிடிச்சுகிடாட்டி அப்பவாவது அது உன் இடம்னு தோணும்…உண்மை புரியும்னு பட்டுது… அதோட தன் பிறந்த வீட்டை நேசிக்காத பொண்ணால புகுந்த வீட்ட மட்டும் எப்படி நேசிக்க முடியும்னு எனக்கு தோணும்…? அதான் அனித்ராகூட சேர்ந்து ஒரு குட்டி ட்ராமா….

என் பேரண்ட்ஸையோ…உன் பேரண்ட்ஸையோ மனச கஷ்டபடவிடுட்டு நம்ம லைஃப தொடங்கிறதுல எனக்கு சம்மதம் இல்லமா….கூடுமானவரை எல்லாரோடும் சமாதானமா இருக்கனும்….நம்மளால கூடாமா போனாதான்…உறவுகளை விட்டுகொடுக்கலாம்….. “

அவன் சொல்ல சொல்ல அத்தனை சூழலிலும் இவள் சாப்பிடவில்லை என்பதால் அவனும் சாப்பிடாதது, இவள் கதவை உள்ளே பூட்டிக்கொள்ள கூடாது என்று சொன்னது….இவள் தனியாக இருக்கும்போதும் அனித்ராவை அனுப்பி வைத்தது என ஒவ்வொன்றாக மனதில் வர…அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

வன் மொபைல் சிணுங்க, இவள்தான் இணைப்பை ஏற்றாள்.

“ஹலோ….”

“போங்கண்ணி நீங்க சுத்த வேஸ்ட்…அத்தனை திட்டுறேன்….ஒரு வார்த்தை பதிலுக்கு பதில் பேசாம இடிச்சபுளி மாதிரி…ப்ச்….ரொம்ப போரிங்…. இந்த நிவந்தும் அப்பாவும் எதுக்கெடுத்தாலும் எனக்கு சிங்க் சா போடுற பார்ட்டி…ஆகா ஒரு அண்ணி வர்றாங்களே… அப்பப்ப காரசாரம ஒரு சண்டைய போட்டோம்…நல்லதா நாலு விஷயம் ஆர்க்யூ பண்ணுனோம்னு லைஃபை ஃபுல்ஃப்ளெட்ஜா என்ஜாய் பண்ணுவோம்னு பார்த்தா…லட்டு மாதிரி ஆப்பர்சுனிட்டில நீங்க டக்கு வாங்கிட்டீங்க…”

“ஹலோ…அப்ப உங்க அண்ணன் சொன்னாங்கன்னு நாய், நாட்டுகோழின்னு எதோ சொன்னீங்க ஓகே…இப்ப என்ன இடிச்சபுளி…இடியாப்பம்னு சொல்லிகிட்டு….வாய் ரொம்ப நீளுதோ…வட்டியும் முதலுமா திருப்பி தருவேன்…ஆமா..”

“ஐயோ அண்ணி நீங்க இன்னும் என் மேல கோபத்துலதான் இருக்கீங்களா…? சாரி….இந்த நிவந்துக்கு ஹெல்ப் பண்றதா நினச்சுகிட்டு….வெரி சாரி அண்ணி…”

“அது….பயந்துட்டீங்கல்ல…பதிலுக்கு பதில் சண்ட போடனும்னு கேட்டீங்களே அதான் ஒரு சாம்பிள் காமிச்சேன்…”

“வரே வா…எனக்கு பிடிச்சமாதிரி அண்ணி செலக்ட் செய்துருக்கான் நிவா..ஐ லவ் யூடா அண்ணா” அலறினாள் அனித்ரா…

“மேடம்ஜி…இந்த டையலாக்க நாங்களே இன்னும் எங்க ஆத்துகாரர்ட சொல்லலை…நீங்க கொஞ்சம் இடத்தை காலி செய்றீங்களா..?”

“ம்…இத சொல்ல எனக்கும் ஒரு ஆள சீக்கிரமா செட் செய்யுங்க…அப்புறம் உங்க பேச்சுக்கு நான் ஏன் வாரேன்…”

“அது தான் தாயே எனக்கு முத வேலை…”

“ஆங்…செலக்ட் செய்றப்ப மாமியார், நாத்தனார்,   ஓரகத்தி எல்லோரும் இருக்கிற மாதிரி குடும்பமா பாருங்க…சண்டபோட்டு ஜாலியா இருக்க வசதியா இருக்கும்…”

“புல்லரிச்சுட்டுமா நாத்தனாரே!…நீங்க போறவீடு எவ்ளவு புண்ணியம் பண்ணியிருக்குதோ…”

“ஹி…ஹி…அது அவங்களுக்கான தேவ உதவி… சண்ட பிடிக்கிற நாத்தனாரும் மாமியாரும்…. நம்மள இன்னுமா கடவுள்ட்ட கிட்டி சேர ஹெல்ப் பண்ணுவாங்களாம்… கேள்விபட்டிருக்கேன்…. எப்பூடி?”

“கலக்கிட்டீங்க போங்க…”

“நன்றி நல்லவங்களே நன்றி… அதோட அப்டியே நிவந்த் அண்ணா  ஃப்ரெண்ட் அவிர் வீட்ல வரப்போற மருமகளுக்கு மாமியார், நாத்தனார், ஓரகத்தி எல்லாம் அல்ரெடி அவைலபிளா இருக்காங்கன்றதையும் சேர்த்து ஞாபகம் வச்சுகோங்க…கரெக்டான நேரத்துல இதை அண்ணா அப்பா காதுல போட்டு நம்மள கரையேத்தி விட பாருங்க…”

“ஹேய்…”

“அண்ணி உங்களத்தான் நம்பி இருக்கேன்…”

மனம் நிறைந்து போனது அஞ்சனிக்கு.

 

ப்பொழுதும் அதே வீடுதான். வீட்டு வாசலிலிருந்து பூக்கோலம், அவர்களது படுக்கை அறை வரையும்.

“அனியோட வேலை…சரியான வாலு…” சொல்லிக்கொண்டே இவள் கைபிடித்து அழைத்துக் சென்றான் நிவந்த்.

ஏனோ மொத்த உலகமும் அவளுடையதாய் தோன்றியது அஞ்சனிக்கு.

 

bn

 

Advertisements

5 comments

Leave a Reply