அறிவாயோ நீ..

செய்ய முடிந்ததெல்லாம் செய்துவிட்டேன்

உன் முகம் பார்க்க மறுத்துவிட்டேன்

உன் மூச்சுபடா இடத்தில் ஒளிந்து கொண்டேன்

ஆனாலும்

தொலைய மறுக்கிறதே இத்துணிகர காதல்.

செய்வது திருட்டல்ல

கொண்டிருப்பது உயிர்காதல்

அடங்க மறுக்கும்

ஆண்மனம்

ஆனந்தமாய் அழுகிறதே

ஆனந்தி அடி ஆனந்தி அறிவாயோ நீ.

 

 

– பொழியாதோ ஆனந்த சுகமழை

Advertisements

Leave a Reply