அன்பின் ராகம் 11 (3)

ஆமாம்  மா… நானும்  அதை தான்  சொல்லனும்ன்னு நினைச்சிட்டு வந்தேன். இப்பவே குழப்பத்தோட ஆரம்பித்தால் நல்லா  இருக்காது. முதல் கோனல் முற்றும் கோனல் அப்படின்னு ஆகிட கூடாது.  நீங்க பார்த்த பொண்ணு  எப்படியும்  உங்க கூடதான் பாதி நேரம் இருக்க போறா… ஆரம்பத்திலேயே தப்பான எண்ணம்  வந்திடுச்சுனா பின்னாடி மாத்திக்கறது கஷ்டம்…

சரிடா குருவிற்கு போன் அடிச்சையா… அவன்  அட்டென் பண்ணினானா…

இல்லை மா… டிரை பண்ணிட்டு தான்  இருக்கிறேன்.  எந்த  இடத்தில்  இருக்கறான்னு கூட தெரியவில்லை.  அவனா கூப்பிட்டா தான்  தெரியும்.  எப்படியும் அழைப்பான். நானும்  டிரை பண்ணிட்டு தான்  இருக்கிறேன்…

சரிடா… நைட்க்கு என்ன  டிபன் வேணும்… சப்பாத்தி  போட்டுடலாமா…

மா… எது ஈசியாக இருக்குமோ அதை செய்யுங்க… எனக்கு  என்ன  தந்தாலும்  ஓகே தான்.  குறைவே சொல்ல மாட்டேன்.

இந்த விஷயத்தில்  அண்ணன் ,தம்பி ரெண்டு  பேரும்  ஓரே மாதிரி  இருக்கறிங்க… இன்னும்  அவன் கூட இருந்தா நான் தான்  சமைப்பேன்னு அடம்பிடித்து  ரகளை பண்ணி இருப்பான்.

ஏம்மா குருவை மிஸ் பண்ணறிங்களா… இந்த  முறை வந்தா பேசலாமா… இனி இங்கேயே வேலை தேடிக்கோன்னு…சொன்னா கேட்டுக்கான்மா… அவனுக்கு  என்னை விடவும் உங்க மேல பாசம் ஜாஸ்தி…

Advertisements

அதனால தாண்டா அவனோடு எல்லா  ஆசைக்கும் சரியின்னு சொல்லிட்டு இருக்கிறேன். ஊர் ஊரா சுற்றாமல் ஒரு இடத்தில்  வேலையில் இருந்தாலே இப்போதைக்கு போதும். ஒரு  வருஷத்துக்கு மேல ஒரு  இடத்தில்  நிற்கிறது இல்லை.  நாளைக்கு  அவனுக்கும் பொண்ணு தேடும் போது நிச்சயமாக  கட்டிக்க போற பொண்ணு யோசிப்பால்ல…

ம்மா நிறைய யோசிக்கறிங்க… கவலையே படாதிங்க இந்த  முறை எங்க  வேலைக்கு  சேர போறானோ அந்த  இடத்தில்  தான்  கடைசி வரைக்கும்  வேலை செய்வான்… நம்புங்க…ஏதேச்சையாக விழுந்த  வார்த்தைகள்  தான்  அதுவும்  அப்படியே பலிக்க போவதை அப்போது உணரவில்லை.

இசைக்கும் அன்பின் ராகம்…                          அன்பின் ராகம் 12

அன்பின் ராகம் தொடரைப் பற்றிய கருத்துக்களை  கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்

அன்பின் ராகம் – Comments Thread

கமென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும்  தளத்தில் பதிவது அவசியம்.

வாசகர்  20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்

வாசகர் 2020 – போட்டி

 

 

 

Advertisements