அன்பின் ராகம் 11 (2)

உங்க அம்மாகிட்ட என்ன  சொன்னிங்க… பிடிக்கலைன்னா முதலிலேயே சொல்ல வேண்டியதுதானே எதுக்காக பொய்யா நடிக்கணும்…

உன்மையிலேயே ஒரு  நிமிடம்  பயந்திருந்தான் ராம். நாம அம்மாகிட்ட தானே சின்ன  பொண்ணா தெரியறா வேண்டாம்ன்னு இது எப்படி  இவளுக்கு  தெரிஞ்சது அம்மா  அப்படி வெளியே  சொல்லற ஆள் கிடையாதே…மனதில் நினைத்தவன்.. சுமி நீ என்ன  சொல்லற எனக்கு புரியவில்லை.

என்ன  உங்களுக்கு  புரியவில்லை.  இங்கே  உங்கள்  பொண்ணுக்கு நீங்க  விருப்ப படறத செய்ங்கன்னு சொல்லிட்டு பின்னாடியே நகை இவ்வளவு  போட சொல்லுங்கன்னு ஆள் அணுப்பினா என்ன  சொல்லுவாங்க… பிடிக்கலைன்னா அன்றைக்கே பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய் இருக்கலாமே… மாற்றி மாற்றி பேசினா…

ஹலோ என்ன  ஓவரா பேசறிங்க… நாங்க யாரையும் அங்கே  அனுப்பல  அதுவும்  நகை கேட்டு… வாய்ப்பே இல்லை… ஒரு  விஷயம்  தெரிஞ்சிக்கோங்க… எங்க அம்மாவே வரப்போற மருமகளுக்காக ஆளுக்கு  இருபது ,இருபது பவுன்  சேர்த்து  வச்சி இருக்கறாங்க… அப்படி  இருக்கும்  போது அவங்க  ஏன்  இப்படி கேட்க போறாங்க… யாரை வேணும்னாலும்  குறை சொல்லுங்க… எங்க  அம்மாவை  சொல்லாதிங்க புரியுதா…

அம்மாவுக்கு உன்னை  ரொம்ப  பிடித்து  இருக்கு அதனால தான்  பேசாமல் இருக்கிறேன்  எங்க  சொந்தத்தில் பொண்ணு  தர நிறைய பேர் ரெடியா  இருக்கறாங்க அம்மாவுக்கு பார்த்ததும் உன்னை  தான்  ஏனோ ரொம்ப  பிடிச்சி போச்சு… நீ என்னடான்னா இவ்வளவு  பேசற…

என்ன  நான்  பொய் சொல்லறது மாதிரி பேசறிங்க…  காலையில்  வந்தாரே ஒருத்தர்… அவர் யாரு… நீங்க  அனுப்பாமல் தான்  தனியாக  வந்தாரா… கேட்டா ஆமாம்  கேட்டேன்னு சொல்லுங்க அத விட்டுட்டு  இப்படி  பேசாதிங்க…

யாரு…சுந்தரம்  அங்கிளா…ராம் கேட்கவும்…

பேர் எல்லாம்  எனக்கு  தெரியாது.  ஆனால்  நகை அதிகமா வேணும்  இது அதுன்னு நிறைய பேசினாரு…

சுமித்ரா  ஏதோ மிஸ் அன்டஸ்டேண்டிங்
என்னன்னு பார்க்கறேன்…

இதோ பாருங்க.. நீங்க எதையும் பார்க்க வேண்டாம் . விருப்பம்  இருந்தா தெளிவாக  சொல்லுங்க..மனசில் ஒன்றை வைத்து  வெளியே  வேற பேசக்கூடாது.  இங்கேயும் அப்பா அம்மா  ரெண்டு  பேருக்கும்  உங்களை  ரொம்ப  பிடிச்சிருக்கு…கடன் வாங்கின்னாலும் அவங்க கேட்கிறது செய்திடலாம்ன்னு
பேசிட்டு இருக்கறாங்க… அவங்கள கடனாளி ஆக்கறதில் எனக்கு  விருப்பம்  இல்லை.

Advertisements

சுமித்ரா  நீங்க இவ்வளவு  கவலை பட வேண்டிய தேவையே இல்லை.  இங்கே  உன்னை  நிச்சயம்  பண்ண புடவை தேவையானத வாங்கி உறவுக்காரங்களுக்கு சொல்ல ஆரம்பிச்சாச்சு… நீ பயப்படற மாதிரி  எதுவும்  ஆகாது.  வேணும்னா மறுபடியும்  அம்மாவை அங்கே  வரச்சொல்லறேன். நேரடியாக  பேசிக்கோங்க…ஏன்னா அம்மாவை  பொறுத்தவரைக்கும் யார்  கிட்டேயும் நேரத்திற்கு தகுந்த மாதிரி  பேசற பழக்கம்  கிடையாது.

தெளிவாக  இவனது பேச்சை கேட்டவளுக்கு கொஞ்சம்  கோபம் குறைந்து இருந்தது  கூடவே கொஞ்சம்  குற்ற உணர்ச்சியும் தோன்றி இருந்தது.  ஒரு வேளை தப்பு  அவங்க பேர்ல இல்லாமல் இருந்தால் தான்  பேசியது அதிகபடிதானே… வீட்டில்  அம்மாவோடு பேசுவது வேறு அதுவும்  சரியாக  பேசாத ஒருவனோடு இவ்வளவு  நேரம்  பேசியது… அதுவும்  அவ்வளவு  கோபமாக… இத்தனைக்கும் இவள் பேச பேச தண்மையாகவே பதில் சொல்லி  கொண்டு  இருந்தான் ராம்.

ஸாரி நான்  வேணும்ன்னு எதுவும்  சொல்லல … கல்யாணத்துக்கு  முன்னாடியே இவ்வளவு  பேசுதுன்னு யோசிக்க வேண்டாம்.

அம்மா  எப்பவுமே என்கிட்ட  சொல்வாங்க ராம் கொஞ்சம்  அமைதி… அவனுக்கு  பார்க்கற பொண்ணு  அவனுக்கும்  சேர்த்து  பேசணும்ன்னு…. சொன்னது  மாதிரியே பார்த்து  இருக்கறாங்க… நான்  எதுவும்  தப்பா நினைக்க மாட்டேன்.  அப்புறம்  உங்க அப்பா அம்மாவுக்கு மட்டும் தான் என்னை பிடிச்சுதா…உனக்கு  பிடிக்கலையா…

இப்படி கேட்கவும்… ராம் அம்மா கூப்பிடற மாதிரி இருக்கு நான் வச்சிடறேன் என கட்  செய்திருந்தாள்….

வாயாடி என்ன செல்லமாக கொஞ்சியபடி தாயாரை தேடி சென்றான் ராம். அம்மா  சுந்தரம் அங்கிள் அவரோட வேலையை சரியா  செஞ்சிட்டு போய் இருக்கறாரு…

என்னடா ஆச்சு…திலகவதி காபியை கலக்கியபடி பேச்சு கொடுக்க… நடந்ததை சொல்லவும்… ம்மா எவ்வளவு  கோபம் வருது  அந்த  பொண்ணுக்கு…

என்னடா பயமா இருக்கா…

ஐய்ய… அப்படி  எல்லாம்  எதுவும்  இல்லை.  எப்படி  அந்த  பொண்ண எந்த அங்கில்ல  உங்களுக்கு பிடிச்சதுன்னு யோசிச்சிட்டு இருக்கிறேன்.

டேய் அந்த  பொண்ணும் கொஞ்சம்  உன்னை மாதிரி  தான்.

மனதிற்குள்  எதையும்  வச்சிக்க தெரியாது. விளையாட்டு  தனமாவே வளர்ந்து  இருக்கறா போல இருக்கு …
சின்ன  பொண்ணு  தானே. .. போக போக சரி ஆகிடுவா…இப்போ என்ன  பண்ணலாம் நீ சொல்லு… இருக்கற குழப்பத்தை சரிபண்ணாம  அப்படியே விடறது சரியா  படலை…

நீ என் கூட வர்றியா நாளைக்கு சாயங்காலமா இந்த  ப்ளைவுஸ் வந்துடுச்சு இல்லையா… சரியா இருக்கான்னு கேட்டுவிட்டு  அப்படியே  இந்த  பிரச்சினையையும் முடிச்சிட்டு வந்துவிடலாம்.

அடுத்த பக்கம்

Advertisements