அதில் நாயகன் பேர் எழுது – உங்கள் பார்வையில்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்…

அதில் நாயகன் பேர் எழுது கதையப் பத்தி நினச்சா உங்களுக்கு என்ன சொல்ல தோணுது… அதை இங்க comments sectionஇல்   பதிவிடுங்க…

வாங்க நம்ம பேரையும் எழுதலாம்

 

 

 

Advertisements

8 comments

 1. English novels la matume historic genre padicha enaku idhu rombave pudhiya anubavama irundhudhu. Kadhai nadakura idamum enaku parichayamana idam, so extra attachment. Kotaiyoda amaipu, andha kalathu palaka valakam and adhoda karanam nu arumaiya describe panirupeenga. Present day life la neenga touch pana core subject rombave sensitive aanadhu, adha azhaga handle panirundheenga. Lead characters nadula iruka andha unarchi poratam thulliyama vivarikuradhula ungaluku nigar neengale! Final knot a epdi justify panuveenganu nan mandaiya pichukadha naal ila, bt neenga adha superb a justify paneenga irundhalum adha accept panika enaku konjam research thevai patuchu. But great shot at an amazing concept ma’am. Ungaloda por kaala scenes la vara maadu diversion moments lam enaku Baahubali la vara scene a dhan nenavu paduthudhu. The moment i saw the movie, i was taken back to your series. Inum neraya neraya ipdi eludhi engala kushi paduthite irunga ma’am. Way to go!!!

 2. That story is a sweet completly.I don’t what to describe a small amount of it.But still when the hero came to know that the heroine was pregnent from that second how he took care of her and her child as his is excellent.
  I like one particular dialogue between the prince and princess in the early morning “vendhay -devi”. I admired that situation and those words very much

 3. பொதுவாக ஒரு கதைக்கு ரிவியூ எழுதினது கிடையாது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் எழுதினது தான்.
  அதில் நாயகன் பேர் எழுது …. முதலில் இந்த தலைப்பு … இந்த கதையின் நாயகன் தன் பேரை, படிக்கும் எல்லோர் மனத்திலும் அழுத்தமாக எழுதி விட்டான்.. அது சேனாவானாலும் சரி.. விவன் என்றாலும் சரி.
  முதலில் ரியா, விவனில் ஆரம்பித்து அங்கிருந்து பாண்டியர் காலத்திற்கு செல்லும் கதையின் நகர்வு அருமையா இருந்தது. இரு வேறு கால கட்டத்திற்கும் ஏற்ற மொழி நடை, அதை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கொடுத்து இருந்த விதம் பாராட்டுக்கள் ஸ்வீட்டி .
  சரித்திர கதைகளில் சோழர் காலங்கள் படித்த அளவு பாண்டியர் வரலாறு ஒரு சில கதைகள்தான் படித்து இருக்கிறேன்.. ஸ்வீட்டி எழுதின இந்த கதை படிக்கும் போது பாண்டியர் பண்பாடு, பழக்க வழக்கம் எடுத்துக் காட்டியிருந்தது மிகவும் அழகு.
  சேனாவின் ஒவ்வொரு செயலும் ஒரு அரசரின் கடமை , ருயம்மாவின் எண்ணங்களை புரிந்து கொண்டு, அவள் வழியிலியே சென்று தன்னை பற்றியும், தன் நாட்டவர்களை பற்றியும் அவளை உணர செய்வது , போர் சமயங்களில் எடுக்கும் அதிவேக நடவடிக்கைகள், மக்களின் மதிப்பை ஏற்கனவே பெற்று இருந்தாலும், அதை காத்துக் கொள்ள செய்யும் செயல்கள் என முழு நாயகனாக ஜொலிக்கிறார்.
  ருயம்மா .. இன்றைக்கு பெண் சுதந்திரத்திற்காக நாம் வைக்கும் வாதங்களை அன்றே பிரதிபலிக்கும் நாயகி. வீரமங்கையாக மிளிர்கிற நேரத்தில், பெண் மனதில் தோன்றும் இயல்பான சஞ்சலங்களையும் கொண்டவராக இருக்கிறாள். அதை அவள் வெளிபடுத்தும் விதமும், பாண்டியரை புரிந்து கொண்ட பின்பு, அதை எடுத்து உரைக்க தயங்கும் பெண்ணாகவும், பெண்ணின் மனது மற்றொரு பெண்ணுக்கு புரியும் என்ற விதத்தில் அவள் காட்டுவதும், பாண்டியர் உத்தரவை மீறாமல், அதே சமயம் அந்த மக்களின் பாரம்பரியத்தை வைத்தே தன் எண்ணத்தை சாதித்துக் கொள்வது என்று மனதை விட்டு அகலாத பெண்ணாகிறார்.
  ரியா .. உடன் பிறக்கா விட்டாலும், தன் அக்காவிடம் அவள் காட்டும் பாசம், அதனால் மேற்கொள்ளும் சங்கடங்கள், விவனிடம் காட்டும் கோபம், விவன் தங்கையிடம் காட்டும் அக்கறை, விவனின் மேல் தவறு இல்லை என்று புரிந்த பின், அவனோடு பழகிய பள்ளி கால நினைவுகளை வெளிபடுத்தும் குறும்பு, தன் நிலைமையால் விவனிற்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயம், அந்த ஆபத்தை தடுக்க மேற்கொள்ளும் முயற்சிகள், அந்த சின்ன மனதில் தோன்றும் சிந்தனைகள் என ரியாவின் பாத்திரம் அருமை.
  விவன் .. என்ன சொல்ல? அவனின் கொள்கைகள், ரியாவின் மேல் கொள்ளும் அன்பு, அந்த அன்பு ரியாவின் கோபத்திலும் அதை பொறுமையாக காட்டிய விதம், அவளின் பயம் தெளிய வைக்கும் முயற்சி , தன் தங்கை மேல் கொள்ளும் பாசம், சமயோசிதமாக செயல்படும் தன்மை, சிறு வயதில் அவனின் கஷ்டங்கள், அந்த நேரத்திலும் தனித்தன்மையை விடாமல் பற்றிக் கொள்ளும் உறுதி என்று அற்புதமான பாத்திர படைப்பு.
  விவன் –ரியா , சேனா – தேவி இருவேறு காலத்தையும் இணைத்த விதம் ஸ்வீட்டி… ஹட்ஸ் ஆப் … அதற்கு கொடுத்த விளக்கமும்.. எதிர்பாரா ட்விஸ்ட். சஸ்பென்ஸ் உடைக்கமால் என்ற வார்த்தை இருப்பதால் இன்னும் கதையின் சில நிகழ்வுகளை விவரிக்க முடியவில்லை. ருயம்மாவின் நாடு என்று சொல்லப்படும் காகதீயம் புதிதாக தெரிந்து கொண்டது.
  என்னை பொறுத்தவரை இதுவரை படித்த ஸ்வீட்டி கதைகளில் இது அவருடைய மைல் கல் என்றுதான் சொல்லுவேன். கம்ப்ளீட் ஸ்டோரி.

 4. “அதில் நாயகன் பேர் எழுது ”

  அனைவரும் இக்கதையை அணு அணுவாக ரசித்து இன்புற அழுத்தமாக பரிந்துரைக்கிறேன் .

  அதற்கான காரணங்கள் :

  அழகியலின் அத்து னை அம்சகளும் அடங்கிய அற்புதமான அன்பியல் அரசி இப்படைப்பு .
  அனிச்சை மலரைப் போன்று மென்மையானது அன்பு.அதே வேளைில் வைரத்தை ஒத்த வலியதும் கூட.இக்கருத்தினை திறமையாகவும் ஆழமாகவும் பதிந்திருக்கிறார் ஆசிரியர்.
  மிகவும் சுவாரஸ்யமான இரு வேறு களங்களில் ,மிகவும் புதிய கோணங்களில் பயணிக்கிறது கதை.அதில் பயணிக்கும் நமக்கு ,பாதுகாப்பிற்குப் பஞ்சமில்லாததொரு கடலலையில் ஒய்யார படகு பயணம் செய்வது போன்ற ஏகாந்தமும்,பரவசமும் தோன்று கிறது .இரு களங்களும் சந்திக்கும் புள்ளியும் அது சார்ந்த திருப்பு முனைகளும் காவியத்தன்மை வாய்ந்த சுவாரஸ்யங்கள்.
  நாயகன் நாயகி இடையேயான அன்பியலும் புரிதலும் அமைக்கப்பட்ட விதம்அழகியலின் உச்சம் தொட்டு ,நம்மை,கதையில் மிச்சமில்லாமல் கரைந்து காணாமல் போகச் செய்கிறது .
  பண்டைத் தமிழர்களின் ,மிகச்சிறந்த பண்பாட்டுக் கூறுகளையும்,உயரிய நாகரீகத்தினையும்,வாழ்வியல் அறங்களையும்,மனித நேயத்திற்கு அவர்கள் அளித்த மதிப்பினையும்,மக்களோடு மக்களாகத் திகழும் மன்னனின் ஆகச்சிறந்த திறமைகளையும் கதை யுடன் பிணைத்து அமைத்த விதம் அருமை.
  அத்துடன்,தற்காலத் தமிழர்களாகிய நம்மிடையே உள்ள சில சமூக சிக்கல்களையும்,அது பொருட்டு நம்மிடையே தேவைப்படும் சில சிந்தனை மாற்றங்களையும்,அழகாகவும்,ஆழமாகவும்,மிகுந்த நாகரிகத்துடனும் முன் வைத்துள்ளார் ஆசிரியர்.
  வாழ்க்கை நசுக்கும்,சில கடினமான வேளைகளிலும்,அச்சூழ்நிலைகளில் தொலைந்து போகாமல்,தன்னையும் மீட்டு,தன்னைச் சார்ந்தோரையும் நேர்மறை அலைகளிில் அழைத்துச் செல்லும் சில கதாபாத்திரங்கள்,நமக்கு வாழ்வியல் கற்பிக்கின்றன.
  எந்த ஒரு படைப்பிற்குள் பயணிப்பதும் ஓர் அனுபவமே.இதில் பயணிக்கும் அனுபவம் ஆகச்சிறந்த அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
  தமிழ் மொழி,இத்துனை உணர்வூட்டமும்,உயிரோட்டமும் கொண்ட அழகிய மொழியா என்று வியக்கும் வண்ணம்,கதை முழுவதும் வியாபித்துள்ளது ஆசிரியரின் மொழி ஆளுமை.தமிழ் மகளின் மெல்லிய இசையுடன் கூடிய அழகிய நடனம் அருமை.
  முழுமையான இப்படைப்பினில் பயணித்து முடிக்கும் போது,முழு நிறைவினை உணர்த்தும் மெல்லிய,சிறு நீர்த்துளி விழியோரங்களில் அரும்புகிறது.
  மொத்தத்தில்” அதில் நாயகன் பேர் எழுது” நம் இதயமெங்கும் அதன் பேர் எழுதி இன்ப மணம் கமழச் செய்கிறது.

 5. அதில் நாயகன் பேர் எழுது – அன்னா ஸ்வீட்டி
  வேர்ல்ட் கிளாஸ் கிரிமினல்ஸ், திரில்லர், சேசிங்லாம் இல்லாம, பெரிய திரில்லர் சீன்ஸ் இல்லாம ஸ்வீட்டி ட்ரை பண்ண கதை.

  எடுத்ததும் எனக்கு பழக்கம் இல்லாத ஒரு பண்டைய தமிழ்ல ஒரு கோட்டையோட பிரம்மாண்டத்தை விவரிக்க ஆரம்பிச்சு அதே கோட்டையிலே முடிஞ்ச ப்ரீ கிளைமாக்ஸ் வரை அந்த பிரம்மாண்டம் கதை முழுக்க இருக்கும்.

  எப்பவும் கிளைமாக்ஸ்ளையும் மொத்த திறமையும் கொட்டுவாங்க இதுலயும் கூட.

  அதுலயும் தலைப்பை கதையோட சேர்த்தர இடத்துல இந்த கதை அல்டிமேட்.

  சும்மாவே இவங்களோடது தேன் தமிழ். அவங்க இறங்கி அடிக்க ஏதுவான காலகட்டத்துல நடக்கற ஒரு பாதி கதை.

  இன்னொரு பாதில ஹீரோ ஹீரோயின்னோட பிரச்சனையில் ஆரம்பிச்சு அவங்க காதல் அவங்கள எப்படி சேர்த்தே வெச்சு இருக்கு இதான் கதையோட பேஸ்.

  மானக்கவசர் – ருயம்மா . இப்படி யாரும் அழகா ப்ரொபோஸ் பண்ணியே இருக்க மாட்டாங்க. அப்படி ஒரு ஸ்கோரிங் இந்த ரியாவோட பாண்டியர். ஆனாலும் எனக்கு ஆரம்பத்துல வர போருக்கான விளக்கம் தான் ரொம்ப புடிச்சது.

  இப்படி ஒரு கஷ்டமான பென்ச் மார்க் வெச்சும் பயங்கரமா வின் பண்ணிட்டாரு விவன். ஸ்கூல்ல சிக்கன் பர்கர்ல ஆரம்பிச்சு ஈர இட்லி வரை சாப்பாடே பெரிய டாஸ்க்கா இருக்கு. ரியாவையே ரியாகிட்டயே DEFEND பண்ணி. அக்மார்க் ஸ்வீட்டி ஹீரோ.

  ரியா – எமோஷனல் இம்பாலன்ஸ் அதுக்கு ஒரு இன்டெலிஜெண்ட் மேதடாலஜின்னு விவன் ல ஆரம்பிச்சு படிக்கற எல்லாரையும் எங்கேஜ்ட்டாவே வெச்சு இருந்த பெருமை ரியாவையே சேரும்.

  இந்த பக்கம் வைட் பாஸ்பரஸ் அந்த பக்கம் விளக்க வெச்சே எதிரி ஓடி கண்ணாடி வரை கண்டுபிடிப்பதுன்னு எத்தன பிரில்லியன்ஸி.

  ஏறு தழுவுதலுக்குலாம் ஏன் பொண்ணு கொடுக்கலாம் அதுக்கு இப்படி நானே ஒத்துக்கற அளவுக்கு ஒரு காரணம் இருக்கும்னு தெரியாம போச்சே.

  ஹோம்ஒர்க்கு செம்ம விளக்கம் விவன்.

  எதையும் ஒருத்தரா எதிர்கொள்றதா விட ரெண்டு பேரா எதிர்கொள்றப்போ வர மனோ பலம் பெருசு இதான் ஸ்வீட்டியோட காதல் பகுதிகளுக்கு அடிப்படை கட்டமைப்பு.

  மத்த எல்லா கதைய விட இதுல ரெண்டு பேருமா சேர்ந்து எதிர்கொள்ற விஷயம் ரொம்ப பெருசு. அதென்னனு படிச்சு தெரிஞ்சுக்கோங்க .

  எனக்கு ரிவியூ எழுதி எல்லாம் பழக்கமே இல்ல.

  கொஞ்சம் எக்கு தப்பா இருந்தால் பொருத்தருளவும்.

 6. நெஞ்சமே காதல் எனும் பாட்டெழுது அதில் நாயகன் பெயர் எழுது மனதி(ல்)தை வெ(நி)ன்றவன் என….

  அதில் நாயகன் பெயர் எழுது ஸ்வீட்டி கதைப் பெட்டகத்திலிருந்து வந்த இன்னுமொரு முத்து. சுவைஞ்ஞனின் ரசனையை விரிவடையச் செய்யும் வகையைச் சார்ந்த கதை இது.

  கதையின் முடிச்சுகளை படிக்க படிக்க அவற்றை அவிழ்க்க நம் மனம் விழையும் பேரார்வத்தை கதைமுழுவதும் நாமே உணரலாம்.

  இந்த கதைக்கு தனிப்பட்டவிதமாய் நான் சூட்டும் பெயர் அத்வைதம் என்பதாயிருக்கும். இரண்டல்ல ஒன்று.

  சுவாரிசியத்திற்கு பஞ்சமில்லாத இரு கதை. ஆம் கதைகள் இரண்டுதான் ஆனால் இரண்டும் இரண்டல்ல…

  பிரிந்த இரட்டையர்கள்
  ஒன்று சேர நடக்கும் சுவாரிசியமான காட்சி நகர்வுகள் போல கதையின் இரு பகுதிகளின் நகர்வும் இருக்கும். கதையின் முடிவில் ஓர் இடத்தில் நாயகி காணும் ஒன்று கதைகளின் இணைவுப்புள்ளி என்றுகூட சொல்லலாம்.

  இரண்டு வெவ்வேறு விதமான காலகட்டத்தில் நடக்கும் கதை. பிரமாண்டமான கோட்டைகள், சண்டைகள், ஏறுதழுவுதல், தூயதமிழ் வார்த்தைப்பிரயோகங்கள் என பழங்கால மன்னராட்சி முறையில் கதையின் கதை,

  நிகழ்காலத்தில் வலி, ஊடல், கூடல் , நாயகன் நாயகி பருவ வயது முன்கதை, திருமணவாழ்க்கை என அதன் நகர்வு.

  இவை இரண்டிலுமே காதல்காட்டப்பட்ட விதம் சிறப்பு. காதலாய் ஒருவன் காதலுக்காய் ஒருவன். இருவருமே நெஞ்சம் வென்ற நாயகர்கள்தான்.

  அவன் ஒரு அரசன். தன் அதிகாரங்களை பயன்படுத்தி நேரடியாக ருயம்மாவை அவள் சம்மதம் இல்லாமலேயே திருமணம் செய்திருக்கலாம். ஆனால் முதலில் மனதை வென்று மனதளவில் யாராழர் /காந்தர்வ மணம் புரிந்து பின்பு ஊர்கூட உற்றம் போற்ற திருமணம்.

  தமிழன் வரலாறு முகிழ்த்தெழுந்தததில் கால்நடைச் செல்வப்பெருக்கிற்குத் தவிர்க்கமுடியாத இடம். அத்தகையதான ஏறினை கதையில் கொண்டுவந்து ஏறு தழுவுதலை திருமணத்தோடு இணைத்து அதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் கைதட்டலுக்குரியவை.

  வாசகன் ரசனை காதலோடு கட்டுப்பட்டு நிற்காமல் சிறகு விரித்த பறவையின் தேடலாய் மேலும் மேலும் பறக்கச் செய்ய வேண்டும். அதை சிறப்பாகச் செய்கிறது இக் கதை.
  வரலாற்றுக்கால நிகழ்வுப் புதிர்கள் நிகழ்கால சம்பவங்கள் கனவும் கேள்விகளுமாய் கதை பயணிக்கும்போது கேள்விகள் குழப்பங்களுக்கான விடையாக பூர்விக்கா செயல் வருகிறது.

  எதிரிகள் நம்மை காயப்படுத்துவதும் நாம் எதிரிகளை காயப்படுத்துவதும் குறைவு நேசிப்பவர்களை காயப்படுத்துவதோடு ஒப்பிடும் போது!!!.

  அது ஏன் அப்படி என்ற பொதுப்பார்வையை தள்ளி வைத்துவிட்டு இது இங்கு ஏன் என ஆராய்ந்தால் கிடைக்கும் விடை பாசத்திற்கும் சுயநலத்துக்குமிடையில் ஊசலாடும்.

  இல்லாத ஒன்றை எதிர்பார்த்து இருக்கும் ஒன்றை காயப்படுத்தி காரியம் சாதிக்க பாசம் கருவியாகி கருவாகிறது.! கதையின் போக்கு இங்கு மாறுகிறது.

  சமூகத்தில் மிகச் சாதாரணமாக போறபோக்கில் உரைக்கப்படும்
  “ மலடி “ என்ற வார்த்தை நடத்திவைக்கும் வியாபாரத்தையும் அதன் பின்னால் விரியும் வலி உலகும் ஈரமான உண்மைகள். ஈரம் காயம் செய்யும் மாயை இங்கு. அவலங்களை சமரசமின்றி தோல் உரித்து காட்டியவகையில் ஆசிரியருக்கு பாராட்டுகள்.

  வலிக்கும் உண்மைக்கும் நடக்கும் போராட்டத்தில் நாயகி நடந்ததை மறக்க அதன் பின்வரும் அத்தனை குழப்பங்களும் ஒவ்வொரு விதமாய் அவளைத்தாக்க அவளோடு சேர்ந்து நாமும் பயணிக்க ஆரம்பிப்போம். ஆனால் நாம் தனியாகத்தான் பயணிக்கவேண்டும் காரணம் நாயகன்.

  ரியா விழும்போதெல்லாம் அவளை கையில் ஏந்திக்கொண்டு நடக்கும் விவன். அவன் துணையோடு அவள் எழுகிறாள். நீண்ட துயில் ஒன்று விழித்துக் கொள்ளவும் விவனே காரணமாகிறான்.

  தன் எண்ணத்திற்கும் உண்மைக்குமான இடைவெளியில் நாயகி தவிக்கும் போதெல்லாம் உண்மையின் விரிவை நீள அகலத்தோடு புரிய வைத்து அவள் மனதில் இடம் பிடிக்கும் நாயகன் மானகவாசன்.

  இவர்கள் செய்யும் சமரசங்களும் காதல் சரசங்களும் கதையில் படிக்க படிக்க சுவைகூட்டும். மானகவாசகர், விவன் இருவருமே காதல் செய்வதில் சளைத்தவர்கள் அல்ல.

  மறக்கப்படும் ஒரு வலியின் பின்னால் சென்று பார்ப்பது போல இருக்கும் ரியா வாழ்க்கை. நிகழ்காலத்து வலியை மறக்கவேண்டும் என்பதற்காக அவள் எடுக்கும் முயற்சியின் பலன் அவளை அவளிடமிருந்தே பிரித்து வேறாக்கி இறந்த காலம் என்ற ஒன்றின் பெரும்பான்மையை மறக்கடிக்கச் செய்துவிடும் அளவிற்கு வினையாகிவிடுகிறது.

  கனவிற்கும் நினைவிற்குமான காட்சிகளின் இணைப்பின் சங்கிலி அறுந்துவிடாமல் காத்த விதம் அருமை. ரியா விவன் காதலுக்கு கொஞ்சமுமம் சளைக்காதது மானகவாசர் ருயம்மா காதல். தன் ஆழ்மனதுக்கும் வெளி மனதுக்குமான போராட்டத்தில் விவன் மேல் கொண்ட காதலை மறைக்கத் தெரியாமல் ரியா விவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக கரைவதும்
  தோற்றத்தை மறைத்து வேடமிடத் தெரிந்த பாவை ருயம்மா மானகவாசர்பால் கரையும் மனதை மறைக்கத் தெரியாமல் போராடுவதும் அழகான காட்சிகள்.

  உன்னிடம் ஒரு கத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதை நீ எவ்வாறு பயன்படுத்தப்போகிறாய்? “

  கதையின் கத்தி ரியா அவளை யார் எதற்காக எப்படி ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பதை கதை நகர்வில் துகில் உரியப்படும் உண்மைகளால் அறியலாம். உண்மை நிர்வாணம் போன்றது. அதை இங்கு உணராலாம்.

  கதையில் ரியா மட்டும்தான் கத்தியா? இல்லை அவளையே பயன்படுத்திக் கொள்ளும் கத்தியும் கதையில் உண்டு.

  நம்மிடமும் அந்த கத்திதான் கொடுக்கப்பட்டுள்ளது அதை நம் வாழ்க்கையில் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் உள்ளது நம் வாழ்க்கை.

  முடிக்குரிய மன்னன் என்ற பொறுப்பும் ஒரு கூர்மையான கத்திதான். மானகவாசர் அந்த கத்தியைக் கொண்டு செய்தவை என்ன என்பதை மானகவாசர் ருயம்மாவுடன் பயணித்தால் மட்டுமே அறியலாம். பயணிப்போமா???

  மன்னனுக்கேற்ற மகாராணி ருயம்மா. அவன் சட்டம் கொண்டே அவள் காரிய சாதிக்கிறாள்.
  அவன் மாயவன் மாயவனையே மயக்கும் வித்தைக்காரி அவள்.

  காதலுக்கே கனவு கண்டவன் விவன் கனவில் கண்டதெல்லாம் கண்ணில் கண்டவள் அவனவள்

  பொருளறியாக் கவிதை ஒன்றின் நாயகியாய் அவள் தனித்திருக்க அதன் பொருள் காண விளைகிறான் ஒருவன். அவன் கண்ட பொருள் தானே ஆகிப்போக அதில் நாயகன் பெயர் எழுதிவிட்டாள் ரியா விவன் என…

  ருயம்மாக்கு மானகவாசர் அளிக்கும் நெற்றிச்சுட்டியும் கணவனானவனிடம் மனைவி ருயம்மாவின் மிகப் பெரிய சந்தேகமும் ரசிக்கத் தக்கவை.

  தனக்கு மனைவியாக்கிக் கொண்டு அவளின் சுக நலன்களை முன்நிறுத்தி அவளை மீட்டெடுக்க உதவும் கணவன் விவன்.

  தனக்கு மனைவியாகும் தருணம் அவள் மனம் சஞ்சலங்களிலிருந்து
  விடுபட்டதாய் இருக்க வேண்டும் என ருயம்மாவின் மனம் உணர்ந்து தன் மனம் உணர்த்தும் மானகவாசர். மானகவாசரின் மர்மப்புன்னகை மனைவியாகப்போகிறவள் உரைத்த மஞ்சளின் மீதிருந்த கவனம், ஊர்காவல், மஞ்சிகை திருமணம் அட அட மனுனுனுனுனுனுனுனுனுனுனு …

  மானகவாசகருக்கும் ருயம்மாவிற்குமான திருமண பந்தம் எத்தகையதாய் இருந்திருக்கும் என்பதற்கான சான்றாய் திருமணத்திற்கு முன் வரும் மஞ்சள் உரைத்த காட்சி போதும். அவளின் இமையின் அசைவுகூட காற்றால் வருகிறதா கவலையில் வருகிறதா என கண்டு பிரச்சனை தீர்க்கும் கணவன் மன்னன் .

  விடுதலை விரும்பாத அடிமை அவன். விடுவிக்க விரும்பாத அரசி அவள். அவன் சிறையும் அவள் ராஜ்ஜியமும் ஒன்று. அவளது இதயமது.

  உரிமையுடையவன் அடிமையாய் பணி செய்துகிடக்க ஆசை கொள்வது காதலில் மட்டுமே சாத்தியம் என்றால் ருயம்மா எனும் ராஜ்ஜியத்தின் சொந்தக்காரன் மானகவாசன் அதை இன்பமாய் ஏற்பான். அன்பின் அடிமைகளுக்கு பெண்கள் ராஜ்ஜியத்தில் விடுதலை இல்லை என மன்னன் அறியமாட்டானா என்ன!
  அவன் அறிவான் என அவளும் அறிவாள் அதனால்தான் கட்டையிட்டுவிட்டாள் தன் இதயமதற்கு “அதில் நாயகன் பெயர் எழுது …..” என.

  நன்றி

 7. அன்பனவனின்
  ஆழ்கடல் நேசத்தை
  மனப்பெட்டகத்தில்
  ஏற்கமுடியாமல்
  மருகி…

  தலைவன்
  அவன்மேல் எழும்
  நிகழ்கால
  குழப்ப கேள்விகளில்
  சிக்கி துடித்து…

  நினைவேட்டில்
  நிதம் நிதம் தோன்றும்
  மன்னன் அவனின்
  கனா பிம்பங்களில்
  குழம்பி தவித்து…

  கனவென்னும்
  மாய லோகத்திலும்…
  பெயர் பெற்ற
  வரலாற்று சுவடிலும்…
  தன் பெயர் செதுக்கிய
  மங்கையவள்…

  தன் நாயகனின் பெயரை
  தேடியறிந்து
  இணைக்க துடிக்கும்
  காதல் காவியமே….

  அதில் நாயகன் பேர் எழுது!!!!

  நாயகன் பெயர்
  எழுதி
  இணைத்தாளா???

  அவன் கையோடு
  கைக்கோர்த்து
  இணைந்தாளா???

 8. “Athil Naayagan Per Ezhuthu”
  Padikure ovvoruthavange manathilum aazhama, azhaga endrendrume veroondri irukure maathiri Annasweety Ma’am ezhuthirukaange! Ahnaal oru twist naayagan per mattum illama naayagi udaiye peraiyume endrendrum azhiyavannam ezhuthirukaange!

  Kathai ennathaan rendu maarupatta trackil payanithaalum vaasagargalaana namaku rendume manathuku pidathamana amsangal konda kathaiyaaga amaigirathu!

  Vivan Jeyrom & Priya
  Aarambathil irunthe bayangara twist and turns udan kadavuleanu serthutaange. Ethanai sothanai nambe Vivanku intha Riya ponne kalyaanam penrathukulle!
  Inge ithai solliye aaganum! Intha kathaiye paditha piragu enakul thondrinathu “Unmaiyaana anbu paaratravunge entha soozhnilaiyilaiyum avangaludaiya anbukuriyavargalai santhegam engira kannotathil paarkave maataargal! Paarkavum mudiyathu! Ithu saga manithargalukkidaiyil varum anba mattum kurithu kidaiyaathu! Naam kadavulidam seluthum anbum koode ithil adakam ”
  Vivan, Riya udaiya kanavanaagilum avan thann manaiviyidam natpu karam neetuvathagattum, annaiyin madiyil mattume kidaikum nimmathiyai thanathu thunaivikku alikum vithamaatum elaavatraiyum miga nerthiyana, alzhagana Tamilil enga elaarudaiye manathil maravaavannam neekamara ezhuthitingge!

  Maanagavasan& Ruiyamma Devi.
  Kathaiye padika padika kaatchigal kann munne thathroobama viriyuthu. Athil neenge kuripitta yaathoru idathirtkum naan sendrathillai ahnaal ikkathaiyai padikum ovvoru manithuliyum naanum avargaludan payanithen endru sonnaal migaiyaagathu! Oru penn enbaval aanukku samamaanaval nu ithai vida azhagaa yaaralaiyum solle mudiyathu! Apdi oru character thaan Ruiyamma Devi!
  Intha kadhaiyodeye Annasweety Ma’am sollirukkum pala samoogam saarntha karuthukal yaavume unmai! Athai naan inge solle maaten because solle vendiyavange solle vendiye muraiyile azhagaagavum, theylivaagavum sollirupaange.

  Naayagan Per Ezhuthu;
  Pala nootrandugalukku munbu aanda Paandiya mannarin aatchiyil marupadiyum vaazha ninaikum ovvoru kudimagan/kudimagal intha kathaiyai kandippaga padikanum. Intha kadhaiyai padithathil irunthu ennai aatchi seigiraar namathu Paandiya Mannan!
  Oru variyil sollanum endraal:
  Adhi Dhool! Kaipesi thiraiyil oru Bramaanda thirai!

  Ipdi review ezhuthurathuku oru platform kudutha anaithu nal ullangalukum and Sweety ma’am kum enathu manamaartha nandrigal!
  -Vaanisri Subramaniam-

Leave a Reply